[X] Close

நஷ்டத்திலிருந்து மீண்டுவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி


  • kamadenu
  • Posted: 29 May, 2019 08:45 am
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் ரூ. 4,750 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் அடைந்த நஷ்டத்தை விட இது 65 சதவீதம் குறைவு ஆகும். மெகுல் சோக்ஸி மற்றும் நீரவ் மோடி இந்த வங்கியில் கடன் பெற்றுநிதி மோசடி செய்து வெளிநாடு தப்பியோடி விட்டனர். அதன் விளைவால் சென்ற நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இந்த வங்கி ரூ.13,417 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

அதன் பிறகு இந்த வாரா கடன்களை மீட்கத் துவங்கியது. மேலும் முறையற்ற கடன்களை தவிர்த்து வந்தது. இந்நிலையில், முடிந்த காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.14,725.13 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் அதன் வருவாய் ரூ. 12,945.68 கோடியாக இருந்தது.

முடிந்த நிதியாண்டில் வங்கி சந்தித்த நஷ்டம் ரூ.9,570.11 கோடியாக உள்ளது. சென்ற நிதியாண்டில் இது ரூ.12,113.36 கோடியாக இருந்தது. 2018-19 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.59,514.53 கோடியாக உள்ளது. சென்ற நிதியாண்டில் இது ரூ.57,608.19 கோடியாக இருந்தது.

முடிந்த காலாண்டில் வங்கியின் வாரா கடன்களின் அளவு 15.50 சதவீதமாக குறைந்துள்ளது.சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 18.38 சதவீதமாக இருந்தது. 2018-19 நிதியாண்டு முழுமைக்கான வாரக்கடன்கள் 6.56 சதவீதமாக உள்ளது. சென்ற நிதியாண்டில் அது11.24சதவீதமாக இருந்தது. பங்குச் சந்தையில் இதன் பங்குகளின் மதிப்பு 3.7 சதவீதம் குறைந்து ரூ.86க்கு வர்த்தகமானது.

திவால் நடைமுறை நடவடிக்கைக்கு சென்ற இரண்டு பெரிய கடன்பெற்ற (ரூ. 6 ஆயிரம் கோடி) நிறுவனங்களின் வழக்குகளில் நடப்பு நிதி ஆண்டில் தீர்வு எட்டப்படும். இதன்மூலம் ரூ. 4 ஆயிரம் கோடி வங்கிக்கு கிடைக்கும் என்றுவங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுநீல் மேத்தா தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close