[X] Close

2018-19 நிதி ஆண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாக கணிப்பு


2018-19-6-9

  • kamadenu
  • Posted: 28 May, 2019 08:12 am
  • அ+ அ-

2018-19 நிதி ஆண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் கணித்துள்ளது.

வரும் மே 31-ம் தேதி 2018-19 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்களையும், 2018-19 நிதி ஆண்டுக்கான ஜிடிபி புள்ளிவிவரங்களையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட உள்ளது. முன்னதாக 2018-19 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது.

 இந்நிலையில் இந்தியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனம் 2018-19 நிதி ஆண்டில் 7 சதவீத வளர்ச்சி சாத்தியமில்லை என்றும், 6.9 சதவீத அளவில்தான் வளர்ச்சி இருக்குமென்றும் கணித்துள்ளது. மேலும் நான்காம் காலாண்டு ஜிடிபியானது முந்தைய காலாண்டில் இருந்த 6.6 சதவீத அளவைக் காட்டிலும் குறைந்து 6.3 சதவீதமாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை நீடிப்பதே காரணம் என்றும், புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசுக்கு பொருளாதார வளர்ச்சியை மந்த நிலையிலிருந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே சவாலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. புதிய அரசு பொருளாதார மந்த நிலையைப் போக்க குறுகிய கால நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பது பலனளிக்கும் என்றும் கூறியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close