[X] Close

பசியில் வாடுவோருக்கு நிதித் திரட்ட நூதன ஏலம்: ரூ.17 லட்சத்தில் வாரென் பஃபெட்டுடன் மதிய உணவு சந்திப்பு


17

  • kamadenu
  • Posted: 28 May, 2019 08:14 am
  • அ+ அ-

பங்குச்சந்தையின் ஜாம்பவனாக அனைவராலும் அழைக்கப்படும் வாரென் பஃபெட் ஒவ்வொரு ஆண்டும் பசி, வறுமையில் வாடுவோருக்காகவும் வீடில்லாதவர்களுக்காகவும் உதவுவதற்காக நிதித் திரட்டி வருகிறார்.

கடந்த 19 ஆண்டுகளில் 30 மில்லியன் டாலர் நிதி திரட்டி உள்ளார். கிளைட் என்ற அமைப்பு இதற்காக வாரென் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏலம் ஒன்றை நடத்திவருகிறது. இந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஒரு நாள் மதிய உணவை வாரென் பஃபெட்டுடன் கலந்துரையாடியபடியே உண்ணலாம். அப்போது அவருடைய ஆலோசனைகளையும் திட்டங்களையும் தொலைநோக்கு பார்வைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஏலத்தில் வெற்றி பெறுபவர் தன்னுடன் ஏழு நண்பர்களையும் அழைத்துவரலாம். மன்ஹாட்டனில் உள்ள ஸ்மித் அண்ட் உல்லன்ஸ்கி நட்சத்திர விடுதியில் இந்த மதிய உணவு நிகழ்வு நடக்க உள்ளது. இந்த ஏலத்தின் மதிப்பு 25,000 டாலர் (ரூபாயில் சுமார் 17 லட்சம்). ஈபே ஆன்லைன் வர்த்தக தளத்தில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த ஞாயிறு மாலை முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஏலம் மே 31 வரை ஒரு வாரம் முழுக்க நடக்க உள்ளது. முதன்முதலில் 2000-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஏலம் 25,000 டாலருக்கு விற்பனையானது. கடந்த ஆண்டு 33 லட்சம் டாலருக்கு விற்பனை ஆனது.

இதுவரை அதிகபட்சமாக விற்பனை ஆனது 2012-ம் ஆண்டு ஏலத்தில்தான். இதனை முறியடிக்க இந்த 20-ம் ஆண்டு ஏலம் 346 லட்சம் டாலருக்கு விற்பனை ஆக வேண்டும். இதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வாரென் பஃபெட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திரட்டப்பட்டும் நிதி பசி, வறுமை மற்றும் வீடில்லாதவர்களுக்கான நலத்திட்டங்களுக்காகச் செலவிடப்பட உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் 8000 பேர் வீடில்லாமல் வீதியில் வசிக்கிறார்களாம். கிளைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இதுகுறித்து பேசியதாவது, “பொருளாதாரம் வளரும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. ஆனால், உண்மையில் வறுமையில் விழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அன்றாட உணவு, தங்குவதற்கு வீடு ஆகியவை இல்லாத நிலையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது.” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close