[X] Close

மத்திய அரசு நலத் திட்டங்களின் செயல்பாடு என்ன?- அரசு துறைகளுக்கு நிதி அமைச்சகம் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 28 May, 2019 08:11 am
  • அ+ அ-

மத்திய அரசின் நலத் திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து துறைகளிடமும் நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் எந்த அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அளிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

நிதி அமைச்சகத்தின் ஒரு அங்கமான செலவு துறை, கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிதிக்கான தொகை செலவிடப்பட்டுள்ளது. இதன் பயனாளிகள் யார், எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தையும், குறிப்பிட்ட திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் எந்த திட்டம் எந்தப் பிரிவினருக்காக செயல்படுத்தப்படுகிறது, ஏற்கெனவே உள்ள திட்டங்கள் எனில் அதில் பலனடைந்தவர்கள் விவரத்தையும் தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

துறைகள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் அதற்கேற்ற ஆலோசனைகளை வழங்குமாறு நிதி ஆயோக்கிடம் கேட்டுக்கொள்ளப் எனத் தெரிகிறது.

இத்தகைய நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து துறை ரீதியாக அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்தையும் தெரிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல்படுத்தப்படும் திட்டமானது தொடர்ந்து மாறுதல் ஏதுமின்றி செயல்படுத்தப்படுகிறதா, மாற்றங்கள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா, மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அது குறித்த பரிந்துரைகளையும் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களான பாரத்நெட், நாமி கங்கா (தேசிய கங்கை திட்டம்), எல்பிஜி இணைப்பு, பயிர் காப்பீடு திட்டம், குடும்ப நல திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்கங்களை நிதி அமைச்சகம் கோரியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close