[X] Close

புள்ளியியல் துறையை புதுப்பிக்க வேண்டும்: நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் கருத்து


  • kamadenu
  • Posted: 27 May, 2019 08:27 am
  • அ+ அ-

இந்தியப் புள்ளியல் துறையை புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். இதற் காக உலக வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் மட்டுமே நிகழ்நேர தகவல்களை உடனுக் குடன் திரட்டி ஆக்கபூர்வமான கொள்கைகளை வகுப்பதற்குப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் அரசு வெளியிட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்களில் சந் தேகம் இருப்பதாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் கூறினர். மேலும் அவர்கள் தற்போது வெளியிடப் பட்டுள்ள பொருளாதார புள்ளி விவரங்கள் மீது படிந்துள்ள புகை மூட்டத்தை ஒரு தனி குழு அமைத்து ஆராய்ந்து விலக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அரசின் பல் வேறு புள்ளிவிவரங்கள் முரணாக இருப்பதே இவர்களின் விமர்சனங்களுக்குக் காரணம்.

இந்நிலையில் இந்தியப் புள்ளியி யல் துறை குறித்து கருத்து தெரி வித்துள்ளார் நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார். அவர் கூறியதாவது, “ஒரு விஷயம் குறித்து நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். இந்தியப் புள்ளியல் துறை புதுப்பிக்க வேண் டிய கட்டாயத்தில் இருக்கிறது. புள்ளியல் துறை நவீனப்படுத்தப் பட்டு, நிகழ்கால உலகத்தோடு தொடர்புடைய புள்ளி விவரங் களைத் திரட்டும் அவசியம் உருவாகியுள்ளது.

இதற்காக உலக வங்கி யுடன் இணைந்து செயல்பட்டுவரு கிறோம். உலக வங்கிக் குழு என்னை சந்தித்தபோது புள்ளியல் துறையை நவீனப்படுத்த என்னவெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண் டும் என்று விவாதித்தோம். நிகழ்நேர புள்ளிவிவர சேகரிப்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி என்பது அவசியத் தேவையாக உள்ளது. இதன் மூலம்தான் ஆக்கபூர்வ கொள்கைகளை வகுக்க முடியும். மேலும், ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கொள்கைகளின் தாக்கம் என்ன என்பதையும் துல்லி யமாக ஆராய முடியும்” என்றார்.

ஏற்கெனவே புள்ளியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் துறை அமைச்சகம், மத்திய புள்ளியல் துறை, தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம், மற்றும் தேசிய புள்ளி யல் அலுவலகம் ஆகிய மூன்றை யும் ஒன்றாக இணைக்க முடிவெடுத் துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றும் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் நிலையில் இவற்றை இணைப்பதன் மூலம் புள்ளி விவர சேகரிப்பை மேலும் ஒழுங்குபடுத்தவும் வலுப்படுத்த வும் முடியும் எனத் தெரிவிக்கப்பட் டது. இந்த நிலையில் ராஜிவ் குமார் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close