[X] Close

ஜிஎஸ்டி ரீஃபண்டுக்கு ஒற்றை சாளர முறை: நிதி அமைச்சகத்தின் புதிய திட்டம்


  • kamadenu
  • Posted: 27 May, 2019 08:28 am
  • அ+ அ-

ஜிஎஸ்டி ரீஃபண்ட் வழங்குவதற்கான ஒப்புதலை இனி ஒரே ஒருஆணையம் வழங்கினால் போதும்என்ற புதிய திட்டத்தை நிதி அமைச்சகம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கான ஜிஎஸ்டி ரீஃபண்டை தாமதமின்றி பெற முடியும்.

தற்போது ஜிஎஸ்டி ரீஃபண்டுக்கான ஒப்புதலை மத்திய மற்றும்மாநில ஜிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் இருவரும் அளிக்க வேண்டும். இதனால் ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த தாமதத்தினால் ஏற்றுமதியாளர்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படுவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையை சரி செய்யும் வகையிலேயே இந்தப் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் ஜிஎஸ்டி ரீஃபண்டுக்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு துரிதமாகவே ரீஃபண்ட் கிடைப்பதற்கு வழிசெய்யும். இந்தத் திட்டத்தின்படி, மத்திய அல்லது மாநில வரித்துறை அதிகாரிகளில் யாரேனும் ஒருவர் ஒப்புதல் அளித்துவிட்டாலேயே, வரி செலுத்துவோர் தங்களுக்கான முழு ரீஃபண்டையும் பெற்று விட முடியும். பிறகு, மத்திய மற்றும் மாநில ஜிஎஸ்டி ஆணையங்கள் தங்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளை நிவர்த்தி செய்து கொள்ளும்.

இந்தப் புதிய திட்டம் வரிசெலுத்துவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஜிஎஸ்டிரீஃபண்ட் உடனடியாக தரப்படுவது அவர்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டம் வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று ஏஎம்ஆர்ஜி அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளர் ராஜாத் மோகன் கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close