[X] Close

புதிய அரசு டெலிகாம் துறையின் நிதிச் சிக்கல்களைப் போக்க வேண்டும்: டெலிகாம் நிறுவனங்கள் கூட்டமைப்பு கோரிக்கை


  • kamadenu
  • Posted: 27 May, 2019 08:28 am
  • அ+ அ-

புதிதாக பொறுப்பேற்கும் அரசு நிதி நெருக்கடியில் உள்ள தொலைத்தொடர்பு துறையை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசுக்குசில கோரிக்கைகளை வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உள்ள நிதி நெருக்கடியைப் போக்கும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென கூறியுள்ளன.

மேலும், டெலிகாம் நிறுவனங்களுக்கான மொத்த வரியை 4-5% என்ற அளவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அலைக்கற்றைகளின் விலையை மறுஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளன. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் 30 சதவீதம் என்ற நிலையில் உள்ளன. இதனை 4-5 சதவீதமாகக் குறைத்தால் நிதி நெருக்கடிகளிலிருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என அவை எதிர்பார்க்கின்றன.

இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது, “டெலிகாம் துறைக்கான வரியானது 5 சதவீதத்துக்கு மிகாமல்இருக்க வேண்டும். உரிமக் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவை மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். மேலும்ஏலத்தில் பெறப்பட்ட அலைக்கற்றைகளுக்கான பணத்தைத் திரும்பத் தர கூடுதல் கால அவகாசம் தர வேண்டும். 5ஜி தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டிய காலகட்டத்தில் துறை நிறுவனங்களின் நிதி நிலை என்பதுஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close