[X] Close

நிதி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்: ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு அறிக்கை


  • kamadenu
  • Posted: 26 May, 2019 08:25 am
  • அ+ அ-

சமீப காலங்களில் வங்கிசாரா நிதி நிறு வனங்கள் (என்பிஎஃப்சி) மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தன. அதைத் தொடந்து வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சிக்கப் பட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களின் பணப்புழக்கம் சார்ந்து புதிய விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறது.

வங்கிசாரா நிறுவனங்களின் கடனாளிகள் மற்றும் வைப்புத்தொகையாளர்கள் பாதிப் படைவதை தடுப்பதற்கு, வங்கிசாரா நிதி நிறு வனங்கள் அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அரசு கடன்பத்திரங்களின் மீதான முதலீடு, நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலை எதிர்கொள்ளும் போது ஒரு மாதத்துக்கு தேவையான பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதியை அளிக்கிறது. இதனால், நிதி நிறுவனங்கள் நிதிச் சிக்கலை எதிகொள்ளும்போது, அதன் கடனாளிகள் மற்றும் வைப்புத் தொகையாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இந்த விதிகள் ரூ.100 கோடி சொத்து மதிப்புள்ள அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதேபோல், பணப்புழக்க விகிதமும் அதில் வரையறுக்கப்பட்டு உள்ளது. ரூ. 5,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள நிதி நிறுவனங்கள் இந்த வரையறையின்படி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த வரையறையின்படி, நிதி நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் நிதிகளின் அளவையும் அளிக்கும் கடன்களின் அளவையும் ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த விதிகள், நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தில் கட்டுபாடுகளை கொண்டு வருகிறது. தேவையான அளவிற்கு மட்டுமே நிதியளிக்க முடியும் என்ற சூழலை உருவாக்குகிறது.இந்த விதிகளை உடனடியாக கடைபிடிப்பது நிதி நிறுவனங்களுக்கு கடினமான ஒன்றாகும். அதனால் அதுகுறித்த வழிகாட்டுதல்களையும் ஆர்பிஐ அளிக்கிறது. ஏப்ரல்2020-க்குள் 60 சதவீத பணப்புழக்க விகித அளவினை அடைய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பத்து சதவீத உயர்வை மேற்கொண்டு, 2024-ஆம் ஆண்டுக்குள் நூறு சதவீத அளவினை அடைந் திருக்க வேண்டும் என்று அது கூறுகிறது.

கடந்த காலங்களில் பெரும் அளவிலான நிதி, பரஸ்பரநிதி திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு இருந்தது. ஐஎல்&எஃப் நிதி நெருக்கடியை எதிர்கொண்டபோது அதன் விளைவாக மற்ற நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய விதிகள், ஒரு நிதி நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அதைச் சார்ந்த பிற நிறுவனங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, வங்கிகள்தான் தங்கள் இருப்புகளில் குறிப்பிட்ட அளவினை அரசு கடன்பத்தரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.பணப்புழக்க விகிதாச்சாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீதும் கொண்டுவரப்படும் இந்த விதிகளால், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் வங்கிகளுக்கு ஒத்ததாக மாறும். இவையாவும் ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு அறிக்கையில் உள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close