[X] Close

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய அரசின் முன் உள்ள சவால் நிலச் சீர்திருத்தம் மிகவும் அவசியமானது: தலைமை பொருளாதார ஆலோசகர் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 07:18 am
  • அ+ அ-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைசந்தித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 காலாண்டில் எட்டப்பட்டதைக் காட்டிலும் டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் 6.6 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் புதியஅரசுக்கு உள்ள சவால்களில் மிகவும் முக்கியமானது நில சீர்திருத்தம் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு வசதியாக நில சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கடுத்தபடியாக தேவையான பணியாளர்களை ஈடுபடுத்த தொழிலாளர் சீர்திருத்தம் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுபுதிதாக பொறுப்பேற்கும் பிரதமர்,நில சீர்திருத்தம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அத்துடன் நிறுவனங்களுக்கு எளிய வகையில் முதலீடுகிடைக்கவும் வழி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்த சட்டத்தின்படி நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம்தான் தொழில் தொடங்குவது எளிதாகும் என்று வலியுறுத்தினார்.

தொழிலாளர்களை பணியில்அமர்த்துவதை எளிதாக்குவதற்கான சட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள 44 சட்டங்களுக்கு மாற்றாக ஒரே ஒரு எளிமையான சட்டம் அதாவது ஊதியம், தொழில்துறை உறவு,சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன், பணியிட சூழல் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றார். குறைந்தபட்ச ஊதியம் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக வட்டி மற்றும் வங்கிகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாத சூழல் ஆகியன தொழில்துறையை வெகுவாக பாதிக்கும் காரணிகளாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேவையற்ற துறைகளுக்கு நிதி அளிப்பது கடந்த ஆண்டுதான் கண்டறியப்பட்டது. இதனால் நிதிப் புழக்கம் குறைந்துவிட்டது. மேலும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமத்தில் ஏற்பட்ட நிதி முறைகேடு பரஸ்பர நிதியை பாதிப்பதாக அமைந்துள்ளது. இந்நிறுவனம் எதிர்கொண்ட நஷ்டம் பரஸ்பர நிதி, ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் ஆகியவற்றையும் பாதித்துள்ளது.

புதிதாக பொறுப்பேற்கும் அரசு வங்கிக் கடனை திரும்பச் செலுத்தும் வசதியிருந்தும் அவற்றை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வரி ஏய்ப்பு செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்போதுதான் தொழில்துறையில் நம்பிக்கை உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close