[X] Close

2 இந்திய தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுக்கு விசா


2-10

  • kamadenu
  • Posted: 23 May, 2019 07:19 am
  • அ+ அ-

இரண்டு இந்திய தொழிலதிபர்கள் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 10 ஆண்டுக் கான விசாவை பெற்றுள்ளனர். வளைகுடா நாடுகள் வெளி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் விசா வழங்க முடிவு செய்துள்ளன. அத்துடன் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்திய தொழிலதிபர்கள் இரண்டு பேருக்கு முதல் முறையாக 10 ஆண்டுக்கான விசாவை நேற்று முன்தினம் வழங்கியுள்ளது. இது தவிர வளைகுடா நாடுகள் திறமை வாய்ந்த மாணவர்களையும் தங்கள் பிராந்தியத்துக்கு ஈர்க்க இது போன்று விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

ரீகல் குழும நிறுவனங்களின் தலைவர் வாசு ஷெராப் மற்றும் குஷி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குஷி கத்வானி ஆகி யோருக்கு விசா வழங்கப்பட் டுள்ளது. இவர்களிருவரது பாஸ் போர்ட்டிலும் 10 ஆண்டுகளுக்கு விசா வழங்குவதற்கான யுஏஇ-யின் வெளி விவகாரத் துறை முத் திரையுடன் அளித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத் திலேயே 10 ஆண்டு விசா வழங்கும் நடைமுறையை யுஏஇ தொடங் கியது. அப்போது சில விஞ்ஞானி கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இத்தகைய விசா அனுமதியைப் பெற்றனர். முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.

விசா வழங்கும் அலுவலகத் திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு சென்ற 5 நிமிடங்களில் தனக்கு 10 ஆண்டு விசா அனுமதி வழங்கப்பட்டதாக வாசு ஷெராப் தெரிவித்தார்.

இதே அனுபவம் தனக்கும் ஏற்பட்டதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் குஷி காத்வானி. இது மிகச் சிறந்த நடைமுறை. வெளி நாடு முதலீடுகளை ஈர்க்க இது சிறந்த வழியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஷெரோப், இந்தியாவின் மிக உயரிய விருதாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) அளிக்கப்படும் பர்வாஸி பாரதிய சம்மான் விருதைப் பெற்றவரா வார்.

2020-ம் ஆண்டில் துபாயில் நடைபெற உள்ள மிகப் பெரிய ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக உள்ளனர். இத்தகைய சூழலில் யுஏஇ அரசாங்கம் இத்தகைய விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியிருப்பது புதிய முதலீடுகள் வருவதற்கு வழியேற்படுத்தும் என்று ஷெராப் குறிப்பிட்டார்.

10 ஆண்டுக்கால விசா வழங்கப்பட்ட நடைமுறையைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நிரந்தர குடியுரிமை வழங்கப்படக்கூடும் என்று தொழிலதிபர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதலீட்டாளர்களுக்கு மிகவும் சவுகரியமான சூழலை இத்தகைய நீண்ட கால விசா நடைமுறை உருவாக்கும் என்று குஷி கத்வானி குறிப்பிட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close