[X] Close

ஐஓசி-யை விட அதிக வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 08:27 am
  • அ+ அ-

மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.6.23 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வருமானத்தை விட அதிகமாகும். இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.6.17 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டியது.

ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வளம், தொலைத்தொடர்பு, டிஜிடல் சர்வீஸ், சில்லறை வணிகங்கள் என பல்வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் ஆகும்.

முடிந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.39,588 கோடியாகும். இது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொத்த லாபத்தை விட இருமடங்கு அதிகாமாகும். முடிந்த நிதியாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.17,274 கோடி ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 8.52 லட்சம் கோடியாக உள்ளது. நேற்று அதன் பங்கு ரூ.1,345 -க்கு வர்த்தகமானது.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் மதிப்பு ரூ. 2.87 லட்சம் கோடியாக உள்ளது. ஒப்பீட்டளவில் இது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கடன் மதிப்பை விட இரண்டரை மடங்கு அதிகமாகும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கடன் மதிப்பு ரூ. 92,700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close