[X] Close

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க இந்துஜா குழுமம் ஆர்வம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 08:26 am
  • அ+ அ-

இந்துஜா குழுமம் நிதி நெருக்கடியால் முடங்கி இருக்கும் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்குவதற்கான சாத்தியங் களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி நெருக்கடியால் தொடர்ந்து செயல்படமுடியாத நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த மாதம் 17 ம் தேதி தனது சேவையை முற்றிலும் நிறுத்தி இருந்தது. இந்நிலையில் அதன் முக்கிய கடன் நிறுவனமான எஸ்பிஐ கடன்களை மீட்கும் முயற்சியில் இறங்கியது. அதன் ஒரு பகுதியாக ஜெட் ஏர்வேஸின் பங்குகளை ஏல முறையில் விற்பனை செய்ய முடிவெடுத்தது.ஏலத் திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட வேண்டிய கடைசி தேதியான மே 10 அன்று எதியாட் நிறுவனம் மட்டுமே ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க முன்வந்தது. ஆனால், முழு பங்குதாரராக இல்லாமல் பகுதியளவு பங்கு தாரராகவே இருக்க முடியும் என்று எதியாட் நிறுவனம் கூறியது. இதனால் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தெளிவு இல்லாமல் இருந்தது.

கடந்த வாரம், ஜெட் ஏர்வேஸை மீட்கும் நடவடிக்கையில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து எதியாட்டும், எஸ்பிஐ -யும் இந்துஜா குழுமத்தை அணுகியது. இந்நிலையில் இந்துஜா குழுமம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்குவதற்கான முயற்சியல் இறங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக அமைந்திருக்கிறது. நேற்று பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸின் மதிப்பு 14 சதவீதம் உயர்ந்துள்ளது

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close