[X] Close

ரெயில்டெல் ஐபிஓ வெளியீடு: வர்த்தக வங்கிகளுக்கு அழைப்பு


  • kamadenu
  • Posted: 21 May, 2019 08:09 am
  • அ+ அ-

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அரசு 25 சதவீத பங்குகளை பொதுச் சந்தையில் விற்க முடிவு செய்துள்ளது.

இதற்காக பொதுப் பங்குகளை வெளியிட (ஐபிஓ) முடிவு செய்யப்பட்டு தகுதி படைத்த வர்த்தக வங்கிகளிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி தகுதியுள்ள வர்த்தக வங்கிகள் ஜூன் 11-ம் தேதிக்குள் ஐபிஓ வெளியீட்டு நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்டெல் கார்ப்பரேஷன் 2017-18-ம் நிதிஆண்டில் ரூ.320 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,249 கோடியாகும். இந்நிறுவனத்தில் 100 சதவீத பங்குகள் அரசு வசம் உள்ளன. இதில் 25 சதவீதத்தை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை (டிபாம்) தெரிவித்துள்ளது. மினி ரத்னா நிறுவனங்களுள் ஒன்றான ரயில்டெல் கார்ப்பரேஷன் நாடு முழுவதும் ரயில்வே பாதையை ஒட்டி கண்ணாடியிழை கம்பிகளை (பைபர் ஆப்டிக் கேபிள்) அமைத்துள்ளது.

இந்நிறுவனம் நாடு முழுவதும் பிராட்பேண்ட் மற்றும் மல்டி மீடியா சேவையை அளிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ரயில்டெல் கார்ப்பரேஷனின் பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி) ஆகிய நிறுவனங்களில் பொதுப் பங்கு வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close