[X] Close

எஸ்ஸார் நிறுவனத்தை வாங்க ரூ. 42,000 கோடி தர தயார்: என்சிஎல்டி-யில் ஆர்சிலர் மிட்டல் தகவல்


42-000

  • kamadenu
  • Posted: 21 May, 2019 08:08 am
  • அ+ அ-

திவாலான எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு ரூ. 42 ஆயிரம் கோடி தரத் தயாராக இருப்பதாக ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்சிலர் மிட்டல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகையான ரூ.2,500 கோடி உள்பட ரூ.42 ஆயிரம் கோடியைத் தர ஆர்சிலர் மிட்டல் தயாராக இருப்பதாக தெரிவித்தார். நிறுவனத்தை செயல்படுத்த ரூ.2,500 கோடி தேவை.

அந்த தொகைதான் குறைந்தபட்ச உத்தரவாத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனத்தின் உரிமையாளர்களான ரூயா சகோதரர்கள் நிறுவனத்தை பிற நிறுவனங்கள் வாங்குவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதன் மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுவதாக அவர் எல்சிஎல்டி-யில் தெரிவித்தார்.

லட்சுமி மிட்டலின் சகோதரர் நிறுவனம் செலுத்த வேண்டிய வாராக் கடன் நிலுவையை சுட்டிக்காட்டி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் நிறுவனம் கை மாறுவதை தடுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகளுக்கு எந்த வகையில் பணத்தை திரும்ப அளிப்பது என்ற விவரத்தை என்சிஎல்டி முன்பு விரிவான அறிக்கையை ஹரீஷ் சால்வே தாக்கல் செய்தார்.

எஸ்ஸார் ஸ்டீர் நிறுவனத்துக்குள்ள கடன் தொகை சமமாக பகிரப்பட்டு அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close