[X] Close

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உச்சம்; பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறித்த கருத்து கணிப்பு எதிராலி


  • kamadenu
  • Posted: 20 May, 2019 10:19 am
  • அ+ அ-

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளன.  

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.

 7-ம் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வந்த தேர்தல் திருவிழா நேற்றைய வாக்குப்பதிவுடன் முடிவடைந்தது. வாக்கு எண்ணகிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின.

THNAK.jpg 

இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே தொடர்ச்சியாக ஏற்றமான போக்கு நிலவி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 286 புள்ளிகள் உயர்ந்து 11,694 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close