[X] Close

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு இரட்டை வரிவிதிப்பு நீக்கப்பட வேண்டும்: மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு கோரிக்கை


  • kamadenu
  • Posted: 20 May, 2019 08:01 am
  • அ+ அ-

இறக்குமதியாகும் நிலக்கரிக்கு விதிக்கப்படும் இரட்டை வரி விதிப்பு நீக்கப்பட வேண்டும் என மின் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டேவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் உற்பத்திக்கான எரிபொருள் செலவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதால், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விலக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுஉள்ளனர்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மின் உற்பத்தி நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு விலை, காப்பீடு மற்றும் போக்குவரத்து போன்றவற்றுக்கு வரிச் செலுத்திய பிறகும் தனியாக ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்பு மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சுமையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் அசோக் குரானா கூறியதாவது, “நிலக்கரி இறக்குமதியாளர்கள் பலர் இதுகுறித்து வழக்குகள் தொடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டுவரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவது முறையல்ல. இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close