[X] Close

900 கிளைகளை ஒருங்கிணைக்க பேங்க் ஆஃப் பரோடா திட்டம்


900

  • kamadenu
  • Posted: 20 May, 2019 08:02 am
  • அ+ அ-

பேங்க் ஆஃப் பரோடா 800 முதல்900 வங்கிக் கிளைகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பேங்க ஆஃப் பரோடாவுடன் தேனா வங்கியும் விஜயா வங்கியும் சமீபத்தில் இணைக்கப்பட்டது. ஏப்ரல் 1 முதல் இந்த இணைப்புஅமல்படுத்தப்பட்டது. அப்போது கிளைகள் உடனடியாக குறைக்கப்படாது என பேங்க் ஆஃப் பரோடா தரப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது வங்கிக்கிளைகளை சீரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தேனா வங்கி, விஜயா வங்கிகள்பேங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்ட பிறகு ஒரே இடத்தில் மூன்று வங்கிகளின் கிளைகள் இருப்பது அவசியமற்றது எனக் கூறியுள்ளது.

இதுகுறித்து பேங்க் ஆஃப் பரோடா மூத்த அதிகாரி கூறியதாவது, “ஒரே இடத்தில் அல்லது ஒரே கட்டிடத்தில் இணைக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் இருப்பது அர்த்தமற்றது. இதுபோல 900 கிளைகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே அவை ஒன்று ஒருங்கிணைக்கப்படும் அல்லது மூடப்படும். சில கிளைகள் தேவைப்படும் இடங்களுக்கு மாற்றப்படவும் வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close