[X] Close

மைண்ட் ட்ரீயை கையகப்படுத்துவதே நிறுவனத்தின் முதல் வேலை: எல் அண்ட் டி தலைவர் நாயக் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 08:00 am
  • அ+ அ-

மைண்ட் ட்ரீ நிறுவனத்தை முழு வதுமாக கையகப்படுத்துவதே எல் அண்ட் டி நிறுவனத்தின் முதல் வேலை என்று எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் நாயக் கூறியுள்ளார்.

ஐடி துறையில் முன்னணி நிறுவ னமாக வளர்ந்துவரும் மைண்ட் ட்ரீயை எல் அண்ட் டி கைப்பற்ற தீவிரமாக முயற்சி எடுத்துவரு கிறது. ஆனால், இதற்கு மைண்ட் ட்ரீ பங்குதாரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எல் அண்ட் டி நிறுவனம் தற்போது 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள 26 சதவீத மைண்ட் ட்ரீயின் பங்குகளை எல் அண்ட் டி தன் வசம் வைத்துள் ளது. இதில் 20 சதவீதம் வி.ஜி.சித்தார்த்தாவிடமிருந்து வாங்கப் பட்டது. மேலும் கூடுதல் பங்கு களை வாங்குவதற்கு எல் அண்ட் டி விருப்பம் தெரித்து இருக்கிறது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவர் நாயக் கூறுகையில், “எங் களுடைய எண்ணம் முழுவதும் தற்போது மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் மீதே உள்ளது. எங்களால் அதனை பெரிய நிறுவனமாக மாற்ற முடி யும் என்று நம்புகிறேன். தற் போதைய நிலையில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 26 சதவீத பங்குகள் எங்களிடம் உள்ளன. இதனை 51 சதவீத பங்குகளாக உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் புரோமோட்டர்கள் அந்த நிறுவனத் தின் மீது பற்றுடன் இருக்கிறார் கள். அதனால் எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள். ஆனால், நாங்களும் தொழிலாளர்களை மையப்படுத் திய நிறுவனம்தான் என்பதை தற்போது உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். எப்படியும் அவர் களிடம் உள்ள 12 சதவீத பங்கு களை அவர்கள் விற்கவே விரும்பு வார்கள். நாங்கள் அவர்களை நிர் பந்திக்கவில்லை. அவர்கள் அதன் பங்குகளை விற்க விரும்பினால் நாங்கள் வாங்க தயாராக இருக் கிறோம்” என்றார்.

எல் அண்ட் டி நிறுவனம் மைண்ட் டீரி நிறுவனத்தின் 66 சதவீத பங்கு களை வாங்குவதற்கான முயற்சி களை மேற்கொண்டுவருகிறது. அவ்வாறு 66 சதவீத பங்குகளை எல் அண்ட் டி பெற்றுவிட்டால் அதிகப் பங்குகளை மைண்ட் ட்ரீ நிறு வனத்தில் கொண்டிருக்கும் பங்கு தாரராக எல் அண்ட் டி மாறும்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close