[X] Close

ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும்: எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் நம்பிக்கை


  • kamadenu
  • Posted: 20 May, 2019 07:59 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியால் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸை மீட்கும் நடவடிக்கையில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும் என எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் கடன் நெருக்கடி, குத்தகை பாக்கி, சம்பள பாக்கி உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் முடங்கியது. ஜெட் ஏர்வேஸுக்கு கடன் வழங்கிய வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் குழு அமைத்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தைக் கைப்பற்றி கடனை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கின. கடனை மீட்க ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஏல முறையில் விற்பனை செய்ய முயற்சித்தன. டிபிஜி கேபிட்டல், இண்டிகோ பார்ட்னர், என்ஐஐஎப் மற்றும் எதியாட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்தன. ஆனால், விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி தேதியான மே 10 அன்று எதியாட் நிறுவனம் மட்டுமே ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்க முன்வந்தது. ஆனால், எதியாட் தன்னால் முழு பங்குதாரராக இல்லாமல் பகுதி பங்கு தாரரகவே இருக்க முடியும் என்று கூறியது. தவிர்த்து, பட்டியலில் இல்லாத இரு நிறுவனங்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதனால்ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தெளிவு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸை மீட்கும் விவகாரத்தில் ஒரு வாரத்தில் தெளிவு கிடைக்கும் எனஎஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார்கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறியதாவது, “ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் பல்வேறு சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டு, சட்ட ரீதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு முதலீட்டாளர்கள் ஜெட்ஏர்வேஸின் பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளார்கள். அவர்களிடம் அதற்கான முதலீடு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். ஓரிரு வாரத்திற்குள் தெளிவான முடிவு தெரியும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார். எதியாட் நிறுவனம் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் தொடர்ந்து செயல்பட இன்னும் ரூ.15,000 கோடி தேவையாக உள்ள நிலையில் ரூ.1,700 கோடி மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்றும் மீதமுள்ள பங்குகளை வாங்க வேறு முதலீட்டாளர்களைத் அழைத்து வர வேண்டும் என்றும் எதியாட் நிறுவனம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், ஜெட் ஏர்வேஸின் உயர் மட்ட அதிகாரிகள் பலரும்ராஜினாமா செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close