[X] Close

ரூ. 630 கோடி முதலீட்டில் அமெரிக்காவில் சுந்தரம் கிளேட்டன் ஆலை


630

  • kamadenu
  • Posted: 19 May, 2019 08:53 am
  • அ+ அ-

டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ரூ.630 கோடி முதலீட்டில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது.

இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைத்துள்ள முதலாவது ஆலை இதுவாகும். வட அமெரிக்காவில் இந்நிறுவனத்துக்கு உள்ள வாடிக்கையாளர்களின் தேவையை இனி இந்நிறுவனம் பூர்த்தி செய்யும் என்று நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு தெரிவித்தார்.

இங்குள்ள ரிட்ஜ்வில்லே தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் ஏற்றுமதிகளில் 60 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானத்தில் 40 சதவீதம் அமெரிக்க சந்தையின் பங்களிப்பாக உள்ளது.

தெற்கு கரோலினா பகுதியில் ஆலை அமைக்கப்பட்டதன் மூலம் இப்பிராந்திய நிறுவனங்களுக்கு பொருட்களை விரைவாக சப்ளை செய்ய முடியும் என்று நிறுவனம் கருதுகிறது. இங்கு ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் சப்ளை நிறுவனமாக சுந்தரம் கிளேட்டன் உயர்ந்துள்ளது. இந்த ஆலை செப்டம்பரில் உற்பத்தியைத் தொடங்கும் என்று லட்சுமி வேணு தெரிவித்தார். 10 ஆயிரம் டன்முதலாண்டில் ஆயிரம் டன் காஸ்டிங் உற்பத்தி செய்யும் வகையில் இந்த ஆலையின் செயல்பாடு இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த உற்பத்தி 10 ஆயிரம் டன்னாக உயரும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆலையில் உயர் அழுத்தத்திலான டை-காஸ்ட் மற்றும் டை-காஸ்ட் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை பெரும்பாலும் ஆட்டோமொபைல் துறையினருக்கானதாகும். அமெரிக்காவின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, சென்னையில் உள்ள வர்த்தக சேவை மையம் ஆகியன இந்த ஆலை உருவாவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

அமெரிக்காவில் தெற்கு கரோலினா பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதி மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இத்துறைக்குத் தேவையான உதிரி பாகங்களை சப்ளை செய்ய இந்த நிறுவனம் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close