[X] Close

ஊழியர்களுக்கு 5 கோடி பங்குகள் வழங்க இன்ஃபோசிஸ் முடிவு


5

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:20 am
  • அ+ அ-

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம் தனதுஊழியர்களுக்கு 5 கோடி பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளை ஊழியர்களும் வாங்கும் திட்டத்தை நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தில் திறமைமிக்கவர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறது.

ஊழியர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பங்குகளை ஊக்கதொகையாக அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்களுக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என நிறுவனம் நம்புகிறது.

இதன்படி நிறுவனத்தின் 5கோடி பங்குகளை அதாவது மொத்தமுள்ள பங்குகளில் 1.15%பங்குகளை ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்குப் பரிசாக இதை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் தெரிவித்தார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் புதுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. இதன்படி இந்தத் திட்டமும் பிற நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று பரேக் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஊழியர்கள்தான் நிறுவனத்தின் மிகப்பெரும் சொத்து என்பது நிரூபணமாகும். நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்வதில் ஊழியர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அத்தகைய அர்ப்பணிப்புஉணர்வுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் விதமாக பங்குகளை அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரேக் கூறினார். இதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் அவர்களும் பயன் பெறுவர் என்று மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டமானது முதலீட்டாளர்களின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close