[X] Close

மசாலா பாண்டுகள் மூலம் ரூ.2,150 கோடி நிதி: கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டம்


2-150

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:21 am
  • அ+ அ-

கடந்த வருடம் வெள்ளத்தில் முடங்கிப்போன கேரளாவை மீட்டெடுக்க மசாலா பத்திரங்கள் விற்பனை மூலம் நிதி திரட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்துள்ளார்.

ரூ.2,150 கோடி மதிப்பிலான மசாலா பத்திரங்களை லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளதாக அறிவித்துள்ளார். கேரள அரசின் நிதி அமைச்சரும் பொருளாதார நிபுணருமான தாமஸ் ஐசக் வெள்ளத்தில் முடங்கிய கேரளத்தை மீட்க இந்த யோசனையை அரசுக்கு வழங்கியுள்ளார். மசாலா பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் திரட்டப்படும் நிதியை வைத்து கேரளாவின் வளர்ச்சியை முன்னெடுக்கலாம் என்பது திட்டம்.

ஒரு மாநில அரசு மசாலா பத்திரங்களை வெளியிடுவது இதுவே முதல் முறை. மசாலா பத்திரங்களை கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் (KIFFB) வெளியிட உள்ளது. இந்த மசாலா பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.2,150 கோடி நிதித் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த முயற்சி வெற்றியடைந்தால், பல மாநில அரசுகள் இந்த வழியைப் பின்தொடர்ந்து நிதித் திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மசாலா பத்திரங்கள் தொடங்கப்பட்டு நான்கு வருடங்களாகியும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமலேயே இருந்துவருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close