[X] Close

லித்தியம் அயன் பேட்டரி சப்ளை சிஏடிஎல், எல்ஜி கெம் நிறுவனங்களுடன் வோல்வோ நிறுவனம் ஒப்பந்தம்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:46 am
  • அ+ அ-

கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்வீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்காக லித்தியம்அயன் பேட்டரிகளை சப்ளை செய்வதற்காக சிஏடிஎல் மற்றும் எல்ஜிகெம் நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் வோல்வோகுழுமத்துக்குத் தேவைப்படும் பேட்டரிகளை எவ்வித இடையூறுமின்றி சப்ளை செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வோல்வோ கார் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் வோல்வோ புதிய தலைமுறை கார்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படும். போல்ஸ்டார் மாடலிலும் இத்தகைய உயர்திறன் பேட்டரிகளை உபயோகிக்க வோல்வோ திட்டமிட்டுள்ளது.

வோல்வோ நிறுவனம் புதிதாக தயாரிக்கும் கார்களில் பெரும்பாலானவற்றை பேட்டரி கார்களாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்களில் 50 சதவீதத்தை பேட்டரி கார்களாக தயாரிக்க உள்ளது. லித்தியம் பேட்டரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீன நிறுவனம் சிஏடிஎல். அதேபோல தென் கொரியாவைச் சேர்ந்தது எல்ஜி கெம்.

இவ்விரு நிறுவனங்களும் சர்வதேசஅளவில் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவையான லித்தியம் அயன் பேட்டரிகளை சப்ளை செய்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close