[X] Close

முதலீட்டாளர்களிடையே கருத்து வேறுபாடு; இன்டர்குளோப் பங்குகள் 9 சதவீதம் சரிவு


9

  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:45 am
  • அ+ அ-

விமான சேவையளிக்கும் இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனம் இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் ஆகும். இந் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்நிறுவன பங்குகள் நேற்று 9 சதவீதம் வரை சரிந்தன.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் 8.82 சதவீதம் சரிந்து ரூ.1,466.60 என்ற விலையில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையில் பங்குகள் 9.82 சதவீதம் வரை சரிந்து ரூ.1,450.50 என்ற விலையில் விற்பனையானது. தேசிய பங்குச் சந்தையில் 8.40 சதவீதம் சரிந்து ரூ.1,475 என்ற விலையில் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் 3.70 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 70 லட்சம் பங்குகளும் வர்த்தகமாயின. வர்த்தகச் சரிவுகாரணமாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,455 கோடிசரிந்தது. தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.56,377 கோடியாக உள்ளது.

முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கருத்துமோதல் குறித்து தகவல் தெரிவிக்காமல், நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டத்தில் எவ்விதமாறுதலும் இல்லை என்று ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிரோனோஜாய் தத்தா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வாரங்களில் இந்நிறுவன பங்குகள் 15 சதவீதம் வரைஉயர்ந்தன. ஆனால் தற்போது ஒரே நாளில் 9 சதவீதம் சரிந்துள்ளது.

நிறுவன முதலீட்டாளர்கள் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் இடையே கருத்து மோதல்ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் அறிக்கை எதையும்வெளியிடவில்லை. இவர்களிருவரிடம் மட்டும் 75 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியான செய்திக்கு விளக்கம் அளிக்குமாறு மும்பை பங்குச் சந்தை இன்டர்குளோப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

ராகுல் பாட்டியா, ராகேஷ் கங்வால் ஆகிய இருவரும் இணைந்து 2006-ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கினர். தற்போது லாபம் ஈட்டும் நிறுவனமாக இது திகழ்கிறது.

ஆனால் நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இவ்விரு நிறுவனர்களுமே முனைந்ததால் இருவரிடையே மோதல் வெடித்தது. புதன்கிழமை இருவருமே தனித்தனியே சட்ட ஆலோசனை நிறுவனத்தை அணுகியதால் உரசல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் சரிந்தன.

கங்வால் தனக்கு வேண்டியவர்களை நிறுவனத்தில் நியமிப்பதாக ராகுல் பாட்டியா கருதுகிறார். இதன் மூலம் நிறுவனத்தை அவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சம் காரணமாக மோதல் உருவானது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஆதித்ய கோஷ் கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்நிறுவனத்திலிருந்து விலகினார். அதன் பிறகு இரு நிறுவனர்களிடையே மோதல் போக்கு வெளிப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close