[X] Close

ரூ. 14 ஆயிரம் கோடி முதலீடு; ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க டார்வின் பிளாட்பார்ம் குழுமம் ஆர்வம்


14

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:25 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு டார்வின் பிளாட்பார்ம் குழுமம் ஆர்வம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனம் நேற்று பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது. இத்தகவலை டார்வின் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் கான்புலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இக்குழும நிறுவனம் ஏற்கெனவே எண்ணெய், எரிவாயு மற்றும் ஹோட்டல், ரியால்டி தொழில்களில் முதலீடு செய்துள்ளது. ஜெட் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக தங்கள் நிறுவனத்தின் விருப்ப விண்ணப்பத்தை (இஓஐ) மே 8-ம் தேதி தாக்கல் செய்துள்ளதாக கான்புலே தெரிவித்தார்.

இதுகுறித்து பேச்சு நடத்த எஸ்பிஐ கேப் நிறுவனம் தங்களை அழைத்ததாகவும், பேச்சுவார்த்தையின்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குள்ள கடன் பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்கள் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கான்புலே தெரிவித்தார்.

விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே நிறுவனத்தின் நிதிநிலை குறித்து ஆராய்ந்ததாகவும், பொது அரங்கில் நிறுவனம் குறித்து வெளியான தகவல்களை பரிசீலித்ததாகவும் அவர் கூறினார்.

நிறுவனம் குறித்து நிறுவன பதிவாளர் அலுவலகத்திடம் குறைவான தகவலே உள்ளன. இதனால் மேலும் விவரம் பெறுவதற்காக எஸ்பிஐ கேப் அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியதாகவும், கூடுதல் தகவலை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிறுவனத்தை ரூ.14 ஆயிரம் கோடிக்கு வாங்குவதற்கு டெண்டர் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எதியாட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸில் விருப்பம் தெரிவித்தாலும், குறைந்த அளவு முதலீடு மட்டுமே செய்ய முன்வந்தது. அதிலும் சில நிபந்தனைகளை அது விதித்துள்ளது.

நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் வசம் 51 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகளை வாங்க டெண்டர் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மே 10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இண்டிகோ பார்ட்னர்ஸ் மற்றும் டிபிஜி, எதியாட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் மற்றும் என்ஹெச்எஃப் நிதியம் உள்ளிட்டவை ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.

வங்கிகளுக்கு ஜெட் ஏர்வேஸ் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.8 ஆயிரம் கோடியாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close