[X] Close

கேஷ்பேக் ஆஃபரில் ரூ. 10 கோடி முறைகேடு மோசடி செய்த நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: பேடிஎம் மால் நடவடிக்கை


10

  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:27 am
  • அ+ அ-

பேடிஎம் மால் ஆன்லைன் வர்த் தக இணையதளமாகும். இது பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இதில் சீனாவைச் சேர்ந்த அலிபாபா உள்ளிட்ட நிறு வனங்கள் முதலீடு செய்துள் ளன. இந்நிறுவனத்தின் இணைய தளத்தின் மூலம் பொருட்கள் வாங் கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் ஆஃபர் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண் டிகையின்போது சில நிறுவனங் கள் மோசடியாக வாடிக்கையாளர் களுக்கு கேஷ்பேக் ஆஃபர் அளித்ததாக நிறுவனத்திடமிருந்து பணத்தை பெற்றுள்ளன. இத்தகைய முறைகேட்டுக்கு உடந் தையாக பேடிஎம் மால் நிறுவன ஊழியர்களும் இருந்துள்ளனர். அந்த வகையில் ரூ.10 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேடிஎம் நிறு வனர் விஜய் சேகர் சர்மா வெளி யிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது: கடந்த ஆண்டு தீபா வளிப் பண்டிகையின்போது சில நிறுவனங்கள் வழக்கத்தை விட அதிக அளவில் கேஷ்பேக் ஆஃபர் சலுகை அளித்ததாக நிறுவனத் திடமிருந்து பணத்தை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடு நடைபெற்றதாக எழுந்த சந்தேகத் தின் அடிப்படையில் இதுகுறித்து விசாரிக்க எர்னஸ்ட் அண்ட் யங் என்ற நிறுவனம் தணிக்கை நட வடிக்கைக்காக நியமிக்கப்பட்டது. கேஷ்பேக் ஆஃபர் வழங்கிய நிறுவனங்களிடம் இந்நிறுவனம் நடத்திய விசாரணையில் நிறு வனத்தை ஏமாற்றி போலியாக கேஷ் பேக் ஆஃபர் சலுகையைப் பெற் றது கண்டுபிடிக்கப்பட்டது. இவ் விதம் மோசடியில் ஈடுபட்ட நிறு வனங்கள் மீது ஏற்கெனவே நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி சில வர்த்தக நிறுவனங் கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டதாக தெரிவித்தார்.

கேஷ்பேக் முறைகேடு நடப் பதாக தகவல்கள் வெளியானதன் விளைவாக பேடிஎம் நிறுவனம் இதுபோன்ற கேஷ்பேக் ஆஃபர் சலுகைகளை குறைத்தது. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக கேஷ்பேக் ஆஃபர் இல்லாத நிலை உருவா னது. இதனால் நிறுவனத்தின் வர்த் தகம் பெருமளவு சரிந்தது. மாதத் துக்கு 4.5 கோடி வாடிக்கையாளர் கள் இந்நிறுவன இணையதளத் துக்கு வந்து பயன்படுத்திய நிலை யில் ஜனவரி மாதம் இந்த எண் ணிக்கை வெறும் 50 லட்சமாகக் குறைந்தது. அதாவது 88% வர்த் தகம் குறைந்தது. இந்நிறுவனம் வர்த்தகர் வாடிக்கையாளர் அணுகுமுறையை மாற்றி நேரடி யாக வாடிக்கையாளரிடமே சென்று சேரும் வகையிலான வர்த்தக உத்தி களைக் கையாள திட்டமிட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close