[X] Close

தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது: இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் கருத்து


  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:05 am
  • அ+ அ-

தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென்மண்டல தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் தமிழகம் 2-வது முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தொழில்தொடங்குவதற்கான சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் சமூக பொறுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

சுற்றுச்சூழல், கல்வி, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து தான் இந்த ஆண்டு பணியாற்ற உள்ளோம். இனி வரும் காலங்களில் அரசிடம் பேசி ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல்களை குறைக்க எங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. மொத்தமாக பார்க்கும் போது, ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் பலன் சிறப்பாக தான் உள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. எனவே, அதற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலை தேடி வரும்சூழலை மாற்ற அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். சிறு, குறு தொழில் நிறுவனங்களை பெரிய நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி தொழில் முனைவோர், தொழில் நடத்துபவர்களுக்கு வாய்ப்புகளை அமைத்து தர திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close