[X] Close

இந்தியன் வங்கிநஷ்டம் ரூ.190 கோடி


190

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:04 am
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 189.77 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. வாராக்கடனுக்கான ஒதுக்கீடு அதிகரித்ததால் வங்கி நஷ்டத்தை சந்தித்ததாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பத்மஜா சுந்துரு தெரிவித்தார்.

நேற்று சென்னையில் உள்ளவங்கியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வங்கியின் நான்காம் காலாண்டு விவரங்களை வெளியிட்டார்.

முந்தைய ஆண்டு இதேகாலத்தில் வங்கி ரூ. 131.98 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டில் வங்கியின் வருமானம் ரூ. 5,537 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 4,954 கோடியாக இருந்தது.

நிதி ஆண்டு முழுவதிலும் வங்கியின் லாபம் ரூ. 320.93 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 1,262 கோடியாகும். வங்கியின் வருமானம் ரூ. 21,073 கோடி. இது முந்தைய ஆண்டில் ரூ. 19,531 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் வாராக் கடன் அளவு 7.11 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வாராக் கடன் அளவு 7.37 சதவீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி ஆண்டு முழுமைக்குமான வாராக் கடன் அளவு 3.81 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இருப்பினும் வாராக் கடனுக்குமொத்தம் ரூ. 1,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இது ரூ. 1,772 கோடியாக இருந்தது. நான்காம் காலாண்டில் வங்கி ரூ. 585கோடி வாராக் கடனை மீட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close