[X] Close

ஐடிசி தலைவரானார் சஞ்ஜீவ் பூரி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:12 am
  • அ+ அ-

ஐடிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்த சஞ்ஜீவ் பூரி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காலாண்டு நிதி நிலை அறிக்கையை நேற்று வெளியிடுவதற்கு கூடிய இயக்குநர் குழு கூட்டத்தில் அவரை தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் தலைவராக இருந்த ஒய்.சி. தேவேஷ்வர் கடந்த வாரம் காலமானதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு சஞ்ஜீவ் பூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-ம் ஆண்டிலிருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை இவர் வகித்து வருகிறார். 2015-ம் ஆண்டில் இவர் இயக்குநர் குழுவில் இடம்பெற்றார். 2017-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை வகித்துவந்தார்.

ஐஐடி கான்பூர் மாணவரான சஞ்ஜீவ் பூரி, வார்டன் வர்த்தக கல்வி மையத்தில் மேலாண் படிப்பு முடித்தவர். ஐடிசி நிறுவனத்தில் 1986-ம் ஆண்டு சேர்ந்த இவர் நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனத்துக்கும் இவர் தலைவராக இருப்பார். அதேசமயம் ஐடிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான சூர்ய நேபாள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் தொடர்வார்.

லாபம் ரூ. 3,481 கோடிஐடிசி குழுமம் மார்ச் காலாண்டில் ரூ. 3,481 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 18.72% கூடுதலாகும். முந்தைய ஆண்டு நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ. 2,932 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் காலாண்டு வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ. 12,946 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டு நிறுவன வருமானம் ரூ. 11,329 கோடியாக இருந்தது. ஒரு பங்குக்கு ரூ. 5.75 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close