[X] Close

டபிள்யூடிஓ சீர்திருத்தங்களில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டால் வளரும் நாடுகளின் வளர்ச்சி கடும் பாதிப்புக்கு உள்ளாகும்: இந்தியா எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:11 am
  • அ+ அ-

சர்வதேச வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) மேற்கொள்ளும் சமரச தீர்வு முறைகளில் செய்யப்படும் மாற்றம் மற்றும் சீர்திருத்தங்களில் ஏற்றத் தாழ்வு நிலை உருவானால் அது வளரும் நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

டெல்லியில் நேற்று தொடங்கிய டபிள்யூடிஓ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 22 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய இந்திய வர்த்தகத்துறைச் செயலர் அனுப்வாத்வான் இக்கருத்தை வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: சர்வதேச வர்த்தக அமைப்பு வகுத்துள்ள விதிமுறைகளை சிலநாடுகள் ஏற்க மறுத்து தன்னிச்சையான முடிவுகளை எடுத்துள்ளன. இப்பிரச்சினை தற்போது பெரும்சவாலாக உருவெடுத்து வருகிறது.

இப்பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், சமரசதீர்ப்பு அமைப்பிற்கு உறுப்பினர்களை நியமிக்காத சூழல் டபிள்யூடிஓ அமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. சமரச தீர்ப்பு மையம் செயல்படாத நிலையில் டபிள்யூடிஓ செயல்பாடுகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட நாடுகள் சுய காப்பு கொள்கையை கடைப்பிடித்து, சர்வதேச பொருளாதார வர்த்தக நடைமுறைக்கு டபிள்யூடிஓ வகுத்தளித்த விதிமுறைகளை அமல்படுத்த மறுக்கின்றன. இந்த நிலைவளரும் நாடுகளுக்கு பெரும் பாதிப்பாக அமையும். குறிப்பாகமிகச் சிறிய அளவில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இது பாதிப்பாக அமையும்.

இப்போதைய சூழலில் டபிள்யூடிஓ அமைப்பின் சமரச தீர்ப்பாயத்துக்கு உறுப்பினர்களை நியமித்து அதை செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும். இந்த அமைப்பால்தான் வர்த்தகம் சார்ந்த சர்ச்சைகளை தீர்த்து வைக்கமுடியும். அத்துடன் டபிள்யூடிஓ அமைப்பையே வலுவான அமைப்பாக நிலை நிறுத்தவும் இதுதான் உதவும். இதற்குத் தேவையான தீர்வுகளைக் காண்பதுதான் இப்போது அவசர அவசியமானது என்றுவாத்வான் வலியுறுத்தினார்.

சமரச தீர்ப்பு அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்க அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாவிடில் இந்தஅமைப்பு செயலற்றதாகிவிடும்.

டபிள்யூடிஓ அமைப்பானது வலுவான கொள்கைகள் மூலம்தான் சிறப்பானதாக உருவாக்க முடியும். ஆனால் துரதிருஷ்டவசமாக அதன் செயல்பாடுகள் பலவீனமடைந்து, நிலைகுலைந்து வருகிறது என்று வாத்வான் சுட்டிக் காட்டினார். டபிள்யூடிஓ உருவாக்கியுள்ள சீர்திருத்தக் கொள்கைகள் வளரும் நாடுகளின் பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்ப வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. டெல்லியில் தற்போது நடைபெறும் இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதித்து பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

சீர்திருத்த நடவடிக்கையில் ஒருங்கிணைந்த மற்றும் பாகுபாடுஇல்லாத சீரான வளர்ச்சி பிரதானவிஷயங்களாகும். அத்துடன்உறுப்பு நாடுகளிடையே நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது, ஏற்றத் தாழ்வுகளை சரி செய்வது உள்ளிட்டவையும் அடங்கும்.

விவாதத்தில் முக்கியமாக இடம்பெறுவது வேளாண் விஷயமாகும். ஏற்கெனவே உள்ள கடுமையான விதிகளை மாற்ற வேண்டிய அவசியமும் உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத வேளாண் சார்ந்த கொள்கைகள் இப்போதாவது சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

ஓரளவு வளர்ந்த நாடுகள்,வளர்ச்சியடைந்த நாடுகள் ஆகியவற்றிடையே ஒருங்கிணைப்பு அவசியம். அதிலும் குறிப்பாக மீன் வளத்துறை சார்ந்த மானியத்தில் நியாயமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றார். செயலர்கள் நிலையில் திங்கள்கிழமை விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அமைச்சர்கள் இடையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் ஓரளவு வளர்ச்சியைடந்த நாடுகளின் அமைச்சர்கள் (சீனா,பிரேசில், சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஆர்ஜென்டீனா, வங்கதேசம், மலேசியா, நைஜீரியா)பங்கேற்கேற்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close