[X] Close

தொழில்துறை கருவிகள், உபகரணங்களின் ஏற்றுமதிக்கான இரும்பு தேவையை முறைப்படுத்த குழு


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:17 am
  • அ+ அ-

தொழில்துறை கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கான இரும்பு தேவையை முறைப்படுத்த டிஜிஎஃப்டி -யின்கீழ் குழு ஒன்றை அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.

இரும்பின் உள்நாட்டு விலை அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அளவிலான விலைக்கே தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஏற்றுமதியாளர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இரும்பு தயாரிப்பதற்கான செலவு அதிகரித்திருக்கிறது. அதனால் அதன் விற்பனை விலையும் அதிகரிக்கவே செய்யும் என இரும்பு தயாரிப்பாளர்களின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இருதரப்பினருக்கும் இடையே நிலவும் பிரச்சினையை சரிசெய்யவும், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான இரும்பு கிடைப்பதை உறுதி செய்யவும் டிஜிஎஃப்டி அமைப்பின் கீழ் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் குழு இரு மாதத்திற்குள் அது சம்பந்தமான அறிக்கையை சமர்பிக்கும். அதன்படி இருதரப்பினருக்கும் ஏற்ற வகையிலான விலையை இக்குழு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்துறை கருவிகள், உபகரணங்கள் ஏற்றுமதி 2018-19 நிதி ஆண்டில் 6.36% உயர்ந்துள்ளது. 2017-2018-ல் 78.7 பில்லியன் டாலராக இருந்த அதன் ஏற்றுமதி மதிப்பு 2018-2019-ல் 83.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இத்துறை சார்ந்த ஏற்றுமதி, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீத பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close