[X] Close

நிதி நிறுவனங்களுக்கு பொறுப்புணர்வு அவசியம்: நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் கருத்து


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:16 am
  • அ+ அ-

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், நிதி நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என நிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் இஞ்சேதி சீனிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் ரூ. 94 ஆயிரம் கோடி கடன் நெருக்கடியில் சிக்கிய பிறகு வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் தாக்கம் உடனடியாகத் தெரிய தொடங்கியுள்ளது. கடன் வழங்க முடியாத நிலை, அதிகக் கடன் சுமை, சொத்துகளுக்கும் கடன்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு மற்றும் பெரு நிறுவனங்களால் ஏற்பட்ட எதிர்பாராத பாதிப்பு என பலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன என்று இஞ்சேதி சீனிவாஸ் கூறியுள்ளார்.

ஆனாலும், பொறுப்புடன் செயல்பட்டு வரும் சில நிதி நிறுவனங்கள் இந்த நெருக்கடிகளை எளிதில் சமாளித்துவருகின்றன என்பதையும் பார்க்க முடிகிறது. இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்கு இருக்கவே செய்யும். நிதி நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் இந்த நெருக்கடியை எளிதில் சமாளித்து மீண்டுவரலாம் என்று அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close