[X] Close

டி-மார்ட் லாபம் 17 சதவீதம் உயர்வு


17

  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:15 am
  • அ+ அ-

சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யு சூப்பர்மார்ட்டின் டி-மார்ட் முடிந்த மார்ச் காலாண்டில் 17 சதவீத நிகர லாப வளர்ச்சியை அடைந்துள்ளது.

2018-19 நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ. 203 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.167 கோடியாக இருந்தது. டி-மார்ட் ஒவ்வொரு நாளும் தனது விற்பனையில் விலைக் குறைப்பு, தள்ளுபடி உள்ளிட்ட உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இதனால் இதன் விற்பனை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டி-மார்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனை இந்த மார்ச் காலாண்டில் 32% உயர்ந்து ரூ.5,033 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.3,810 கோடியாக இருந்தது. 2018-19 நிதி ஆண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.19,916 கோடியாக உள்ளது. மொத்த நிகர லாபம் ரூ.936 கோடி ஆகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close