[X] Close

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்: ஆப்பிள் பங்கு மதிப்பு 75 பில்லியன் டாலர் சரிவு


75

  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:42 am
  • அ+ அ-

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரின் தாக்கத்தினால் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் ஒரே வாரத்தில் 75 பில்லியன் டாலர் சரிவைக் கண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அமெரிக்கா-சீனா இடையிலான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான சிப்செட், பிசிபி போர்ட் போன்றவற்றை வழங்குவதிலும், ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதிலும் சீனாதான் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் அமெரிக்கா-சீனா இடையில் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி ஆகும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஆப்பிள் நிறுவனப் பங்கு 9 சதவீத சரிவைக் கண்டுள்ளது. சந்தை மதிப்பில் 75 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் மிகப் பெரிய சரிவாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு 900 பில்லியன் டாலராக உள்ளது. இதற்கு முந்தைய இடங்களில் மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close