[X] Close

ஹம்லேஸ் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:00 am
  • அ+ அ-

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஹம்லேஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 6.80 கோடி பவுண்டுக்கு (சுமார் ரூ.618 கோடி) இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் வாங்கியுள்ளது.

பொம்மை தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக ஹம்லேஸ் திகழ்கிறது. 1760-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்நிறுவனம். ஏறக்குறைய 250 ஆண்டு பழமையான பிரிட்டன் நிறுவனத்தை 2015-ம் ஆண்டு 10 லட்சம் பவுண்டுக்கு சீனாவைச் சேர்ந்த சி பானர் இன்டர்நேஷனல் நிறுவனம் கையகப்படுத்தியது. மிகவும் பழமையான இந்நிறுவனத்துக்கு 18 நாடுகளில் 167-க்கும் அதிகமான விற்பனையகங்கள் உள்ளன.

இந்தியாவில் இந்நிறுவனத் தயாரிப்புகளை விற்பனை செய்யும் உரிமையை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இந்தியாவில் 29 நகரங்களில் 88 விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஹாம்லேஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close