[X] Close

பேச்சுவார்த்தை முடிவடையும் முன்பே சீனப் பொருட்கள் மீது கூடுதலான வரி விதிப்பை அமல்படுத்தியது அமெரிக்கா


  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:59 am
  • அ+ அ-

அமெரிக்கா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் திட்டமிட்டபடி ட்ரம்ப் அரசு சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை நேற்று அமல்படுத்தியது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு 200 பில்லியன் டாலர் வரிவருவாய் கூடுதலாக கிடைக்கும்.

சீனப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகமானது. ட்ரம்ப்பின் இந்த முடிவு சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அடுத்து சீன அரசின் மூத்த அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை முடிவு பெறுவதற்கு முன்பே திட்டமிட்டபடி சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப். இதையடுத்து நேற்று வாஷிங்டன் நேரப்படி காலை 12.01 மணியிலிருந்து இந்த கூடுதல் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால் 5,700-க்கும் மேலான சீனப் பொருட்கள் மீது வரி விதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் முந்தைய நிதி ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட சீனப் பொருட்களின் மதிப்பு 540 பில்லியன் டாலர் ஆகும். இவற்றின் மீது இந்த கூடுதல் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பானது ஏற்கெனவே அமெரிக்க கடலோரப் பகுதிகளில் வந்திறங்கியுள்ள சரக்குகளின் மீது செயல்படுத்தப்படாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close