[X] Close

ஜெட் ஏர்வேஸ் மும்பை சொத்து ஏலம்: ரூ.414 கோடியை மீட்க ஹெச்டிஎஃப்சி நடவடிக்கை


414

  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:00 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியால் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தை ஏலத்தில் விற்பனை செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது.

ரூ.414 கோடி கடன்

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ஜெட் ஏர்வேஸ் செலுத்த வேண்டிய கடன் ரூ.414 கோடிநிலுவையில் உள்ளது. இந்தக்கடனை மீட்பதற்காக அடமானமாக வைக்கப்பட்ட மும்பையில் உள்ள ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அலுவலகத்தை ஏலத்தில் விற்பனை செய்ய வங்கி முடிவு செய்துள்ளது.

மும்பை புறநகர் பகுதியில்உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 52,775 சதுரஅடி பரப்பு கொண்ட இந்த அலுவலகத்தின் ஆரம்ப விலைரூ.245 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம்இந்த அலுவலகம் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் மே 15-ம் தேதி நடக்கும் என வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸுக்கு வங்கிகளில் ரூ.8,200 கோடி அளவிலான கடன் நிலுவையில் உள்ளது.

இதுபோக ஊழியர்களின் சம்பள பாக்கி, தொடர்ந்து சேவையை நடத்துவதற்கான செயல்பாட்டு மூலதனம் போன்றவை இல்லாத காரணங்களால் கடந்த ஏப்ரல் 17 முதல்விமான சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. எஸ்பிஐ தலைமையிலான வங்கிக் குழு நிறுவனத்தை மீட்கும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அதற்குள் ஜெட் ஏர்வேஸின் சொத்துகள், விமானங்கள் அனைத்தும் விற்பனைக்கும் குத்தகைக்கும் விடப்பட்டுவிடும் போலிருக் கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close