[X] Close

ஹெச்சிஎல் லாபம் ரூ. 2,550 கோடி


2-550

  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:01 am
  • அ+ அ-

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.2,550 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் ஈட்டிய லாபத்தை விட 14 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.2,230 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.15,990 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.13,178 கோடியாக இருந்தது. வரும் நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் 14 சதவீதம் முதல் 16சதவீதம் வரை அதிகரிக்கும் என கணித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதி ஆண்டு முழுமைக்குமான லாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ.10,120 கோடியாக உள்ளது. வருமானம் 19 சதவீதம் அதிகரித்து ரூ.60,427 கோடியாக உள்ளது. நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.2 இடைக்கால டிவிடெண்ட் அறிவித் துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close