[X] Close

ஆட்டோமொபைல் துறையில் தேக்க நிலை: உருக்குத் துறையில் கடுமையான பாதிப்பு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 07:59 am
  • அ+ அ-

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை காரணமாக உருக்குத் தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஆர்சிலர் மிட்டல் எச்சரித்துள்ளது.

உலக அளவில் உருக்கு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டு உருக்குத் துறை மிகப் பெரும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் நிலவும் தேக்க நிலை காரணமாக உருக்கின் தேவை குறைந்துள்ளது. அத்துடன் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாகவும் உருக்குத் துறை கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மிகக் குறைவான லாபத்தை ஈட்டியுள்ளது. 2016-ம் ஆண்டிலிருந்து இது வரையான காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய மிகக் குறைந்த லாபம் இதுவாகும். இது குறித்து கருத்து தெரிவித்த இந்நிறுவனம் ஐரோப்பிய உருக்குசந்தையின் நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே கடுமையான இடைவெளி ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் உருக்கின் தேவை மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு உருக்கின் தேவை 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று இந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. அதேசமயம் சீனாவில் உருக்கின் தேவை அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. ஐரோப்பிய உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் தற்போது இரண்டு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது உள்நாட்டில் உருக்கின் தேவைமிகக் குறைவாக இருப்பது.

அத்துடன் குறைந்த விலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு காரணமாக ஐரோப்பிய நிறுவனங்கள் மிகப் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உருக்கு உற்பத்திக்கு மூலப் பொருளை அளிக்கும் பிரேசில் சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளதும் உருக்கு தொழிலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கார்களுக்கான உருக்கு சப்ளை மிகவும் லாபகரமான ஒன்று. உருக்கு உற்பத்தியில் 20 சதவீதம் கார்களுக்கான தேவையாகும். ஆனால் கார் விற்பனை குறைந்து வரும் நிலையில் உருக்கின் தேவையும் குறையும். சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.

கார் உற்பத்தி மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்தஉற்பத்தி துறையே மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளது. ஜெர்மனியின் தொழில் துறை கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே தேக்க நிலையை சந்தித்து வருகிறது. இத்தாலியின் உற்பத்தி துறை மிகவும் மோசமான சூழலை சந்தித்துள்ளது.

இதனிடையே உள்நாட்டு தேவையும் குறைந்துள்ள நிலையில் இறக்குமதியும் ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close