[X] Close

மும்பையில் ஆப்பிள் நிறுவன முதல் விற்பனையகம்


  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:51 am
  • அ+ அ-

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஆப்பிள் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை மும்பையில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியா ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கான முன்னணி சந்தையாக விளங்குகிறது. மேலும், ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருந்த ஆப்பிள், சீன பிராண்டுகளின் வரவால் சமீபகாலமாக விற்பனையில் தொய்வடைந்துள்ளது. மீண்டும் சந்தையில் தனது இடத்தைப் பிடிக்க தேவையான நடவடிக்கைகளில் ஆப்பிள் இறங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் அமெரிக்காவிலிருந்து 47 சதவீத வருமானமும், சீனாவிலிருந்து 18 சதவீத வருமானமும் கிடைக்கிறது. ஆனால், இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்பிள் நிறுவனம் அடையும் வருமானம் என்பது குறைவாகவே உள்ளது. எனவே இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதுவரை டீலர்கள் மூலமாக விற்பனை செய்துவந்த ஆப்பிள் நிறுவனம் நேரடியாக வர்த்தகத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் அமைக்க உள்ளது. நாளடைவில் பிற நகரங்களிலும் விற்பனையகத்தை அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close