[X] Close

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவன சீரமைப்பு: மத்திய அரசு பரிசீலனை


  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:06 am
  • அ+ அ-

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சீரமைப்பு திட்டங்களை மறு ஆய்வு செய்யுமாறு தொலைத் தொடர்த் துறையை மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சீரமைப்பு திட்டத்தை புதிதாக மத்தியில் பொறுப்பேற்கும் அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தேர்தல் முடிந்து அதன் பிறகு அமையவுள்ள அரசு இதை பரிசீலிக்க அடுத்து ஓரிரு மாதங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் தொலைத் தொடர்புத் துறை மத்திய அமைச்சரவைக்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தது. அதில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை சீரமைப்பதற்கான பரிந்துரை இடம்பெற்றிருந்தது.

இதன் விளைவாக தற்போது நிதி அமைச்சகம் தொலைத் தொடர்புத் துறையிடம் சீரமைப்பது தொடர்பான திட்டங்களை பரிசீலிக்குமாறு கூறியது.

இவ்விரு நிறுவனங்களிலும் தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் (விஆர்எஸ்) கொண்டு வருவது மற்றும் 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்குவது ஆகியன முக்கியமான பரிந்துரைகளாகும்.

இவ்விரு பொதுத்துறை நிறுவனங்களிலும் விஆர்எஸ் அளிப்பதற்கு அதிக நிதி தேவைப்படாது. ஏனெனில் இவ்விரு நிறுவனங்களின் ஊழியர்களும் ஏற்கெனவே அரசு ஓய்வூதிய திட்டத்துக்கு தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதனால் இவ்விரு நிறுவனங்களுக்கும் 4 ஜி அலைக்கற்றை ஒதுக்குவது மட்டும்தான் பிரச்சினையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இரு நிறுவனங்களுக்கும் சொந்தமாக உள்ள காலியிடங்களை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கும், பொது சொத்து நிர்வாகத் துறைக்கும் இடையே இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ. 14 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. இந்நிறுவனம் 4 ஜி அலைக்கற்றை மற்றும் ரூ. 7 ஆயிரம் கோடி அரசு முதலீட்டை எதிர்நோக்கியுள்ளது. அலைக்கற்றையின் விலை ரூ. 14 ஆயிரம் கோடி.

விஆர்எஸ் அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.6,365 கோடி நிதிச் சுமையும், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ. 2,120 கோடி சுமையும் ஏற்படும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close