[X] Close

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்: ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்டு எச்சரிக்கை


  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:05 am
  • அ+ அ-

அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் காரணமாக உலக நாடுகளின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டைன் லகார்டு எச்சரித்தார்.

சீன இறக்குமதி மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இக்கருத்தை லகார்டு தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அவசர கதியில் எந்த முடிவும் எடுக்காது என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் தரப்பிலிருந்து வர்த்தக பிரதிநிதி லியு ஹி இந்த வாரத்தில் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் 10 சதவீதமாக உள்ள இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தகப் போர் நிச்சயம் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரு நாடுகளும் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பதே அனைத்து நாடுகளுக்கும் சிறந்தது என்று லகார்டு சுட்டிக் காட்டினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close