[X] Close

மாணவர்களுக்குப் பாதகம் விளைவிக்கும் விசா கொள்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை


  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:43 am
  • அ+ அ-

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட புதிய விசா கொள்கையை நடைமுறைப்படுத்த தடை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

அமெரிக்காவில் சமீப காலங்களாக வெளிநாட்டினர் மீதான கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு பலதரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட்டில் கொண்டுவரப்பட்ட புதிய விசா கொள்கை வெளிநாட்டு மாணவர்களுக்குப் பாதகம் விளைவிப்பதாக இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்த அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தப் புதிய விசா கொள்கையின்படி அமெரிக்காவில் 180 நாட்களுக்கு மேல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவில் நுழைய முடியாது. ஒரு வருடத்துக்கு மேல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவில் நுழைய முடியாது. இந்தக் கொள்கை படிக்க வந்த மாணவர்கள் மீதும் பாய்வதாக உள்ளது. மாணவர்களுக்கு எதிரானதுவெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அவர்களுக்கான மாணவர் விசா விதிமுறைகளை மீறினால், அவர்களை சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் என்று முடிவு செய்யவும், 10 ஆண்டுகள் வரை மீண்டும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கவும் வழிசெய்யும் வகையில் இந்த புதிய விசா கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர்களை பொறுத்தவரை பல நேரங்களில் தவறுதலாக நடக்கும் விதிமீறல்களே அதிகம் உள்ளன. உதாரணமாக முகவரி மாற்றம், அல்லது பள்ளியில் பதிவு செய்யப்படும்போது தகவல்களில் ஏற்படும் பிழைகள் என பல தவறுகள் யதார்த்தமாக நடக்கின்றன. ஆனால், இவையும் விதிமீறல்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு புதிய விசா கொள்கை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கருதப்பட்டது. இதனால் மாணவர்கள், அவர்களின் குடும்பங்கள் எனப் பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நீதிமன்றம் தடை

எனவே புதிய விசா கொள்கையை நடைமுறைப்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம். இதன் மூலம் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close