[X] Close

மிஷன் எலெக்ட்ரிக் திட்டம்: ஓலா நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:40 am
  • அ+ அ-

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவில் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீட்டின் மதிப்பு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க பல தரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் முன்னணி டாக்சி சேவை நிறுவனமான ஓலா தனது பங்களிப்பாக எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்ற தொழில் பிரிவைத் தொடங்கியுள்ளது. இதில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். 2021-ல் இந்திய சாலைகளில் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க ஓலா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதற்காக மிஷன் எலெக்ட்ரிக் திட்டத்தைத் தொடங்கியது.

இந்தத் திட்டத்தின்படி ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் முதல் நிலை நிதித் திரட்டல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஓலாவின் தாய் நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜிஸில் டாடா ரத்தன் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளார். தற்போது ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டியிலும் அவருடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் டாடா முதலீடு செய்திருப்பதன் மூலம் எலெக்ட்ரிக் தொழில் பிரிவுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆழமான அனுபவமும் அவர் வழியே ஓலா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

இதுகுறித்து ரத்தன் டாடா கூறியதாவது, “எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். இது எதிர்கால ஆட்டோமொபைல் துறையின் உத்தி சார்ந்த முக்கிய நடவடிக்கையாக இருக்கும்” என்றார். . சார்ஜிங் தொடர்பான உட்கட்டமைப்புகளில் புதுமைகளைப் புகுத்துதல், சந்தைக்கு ஏற்ற சரியான தயாரிப்புகளைக் கொண்டு வருதல் போன்றவற்றில் ஓலா நிறுவனம் கவனம் செலுத்தும் என அதன் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி இதுவரை ரூ.400 கோடி நிதித் திரட்டியுள்ளது. டைகர் குளோபல், மேட்ரிக்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close