[X] Close

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் நடவடிக்கையால் பங்குச் சந்தை கடும் சரிவு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:41 am
  • அ+ அ-

அமெரிக்கா, சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

ஆசிய அளவில் பல நாடுகளின் சந்தையிலும் கரடியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. வாரத்தின் முதல் நாளான திங்களன்று மும்பை பங்குச் சந்தை 362 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் 114 புள்ளிகள் வரை சரிந்தது.

வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 38,600 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 11,598 ஆகவும் குறைந்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் சீன தயாரிப்புகள் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரியை 25 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இறக்குமதி வரி வருவாய் 20,000 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் எதிரொலியாக சீன பங்குச் சந்தை 5 சதவீத அளவுக்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் பிபிசிஎல், டிசிஎஸ், பஜாஜ் பைனான்சியல் சர்வீசஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. அதே சமயம் ஜீ என்டர்டெயின்மென்ட், டைட்டன், யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் கடுமையாக சரிந்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close