[X] Close

இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி 84 சதவீதமாக உயர்வு


84

  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:15 am
  • அ+ அ-

இந்தியா எண்ணெய்க்காக பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 84 சதவீதமாக உயர்ந்தது.

2013-14-ல் எண்ணெய் இறக்குமதி 77 சதவீதமாக இருந்தது. அப்போது இந்தியா எண்ணெய்க்காக பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ம் ஆண்டில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் எனவும் இலக்கு வைத்தார். ஆனால், தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணெய்க்கான தேவை காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் வீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எண்ணெய் வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2017-18-ல் இந்தியா தனது எண்ணெய் தேவையை 82.9% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்துகொண்டது. 2018-19-ல் இது மேலும் உயர்ந்து 83.7 சதவீதமானது. நுகர்வு அடிப்படையில் 2018-19 நிதி ஆண்டில் 211.6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் நுகரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி என்பது தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 2015-16 நிதி ஆண்டில் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி 36.9 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2018-19 நிதி ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. முன்னணி எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி-யின் உற்பத்தி 2015-16-ல் 21.1 மில்லியன் டன்னாக இருந்தது, 2018-19 நிதி ஆண்டில் 19.6 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close