[X] Close

மாருதி சுசூகியைத் தொடர்ந்து டீசல் கார் உற்பத்தியைக் குறைக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:16 am
  • அ+ அ-

வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸ் சிறிய அளவிலான டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி 2020-ல் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 2020-ல் பிஎஸ் 6 தர நிர்ணய முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில், டீசல் கார் வாகனங்களை பிஎஸ் 6 தர நிர்ணய முறைகளில் உருவாக்குவது செலவு மிகுந்தது என்பதால் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் மாடல்களான டியாகோ, டிகோர், போல்ட் மற்றும் செஸ்ட் போன்றவை டீசல் இன்ஜினுடன் உள்ளன. இந்த வகைகளில் டீசல் வேரியன்ட்களைக் காட்டிலும் பெட்ரோல் வேரியன்ட்கள் நன்றாக விற்பனை ஆகின்றன என டாடா மோட்டார்ஸ் நிர்வாகி மயங்க் பரீக் கூறுகிறார். எனவே, அதிக செலவினத்தில் சிறிய மற்றும் நடுத்தர ரக டீசல் மாடல்களை உற்பத்தி செய்வது அவசியமற்றது என்றார்.

ஆனால், டாடாவின் எஸ்யுவி மாடல்களில் டீசல் வேரியன்ட்கள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close