[X] Close

எலெக்ட்ரிக் வாகனச் சந்தையை ஊக்குவிக்கும் ஃபேம் திட்ட வெற்றிக்கு உள்நாட்டு பங்களிப்பு அவசியம்: இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சிஐஐ) கருத்து


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:14 am
  • அ+ அ-

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்டுள்ள ஃபேம் திட்டம் வெற்றிபெற வேண்டுமெனில் அதற்கு பல்வேறு துணை திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவசியம் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கருத்து தெரிவித்துள்ளது.

மாசுபாடில்லாத போக்குவரத்து சாத்தியம் ஆக வேண்டுமெனில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு ஃபேம் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டப்படி 2030-ல் இந்தியா எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் நிறைவுடன் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேம் திட்டம் அதன் இலக்கை முழுமையாக அடைய வேண்டுமெனில் அதற்கு பல்வேறு துணை திட்டங்கள் அவசியமாகிறது என சிஐஐ தரப்பு தெரிவித்துள்ளது.

அதாவது உள்நாட்டிலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரித்தல், எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி உள்ளிட்ட பிற பாகங்கள் தயாரித்தல் அவசியம். எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் 64 சதவீத சாலை போக்குவரத்துக்கான எரிபொருள் தேவையைக் குறைக்கலாம். இதன் மூலம் 2022-ல் எண்ணெய் இறக்குமதியையும் 10% குறைக்க முடியும். மேலும் 37 சதவீத கார்பன் வெளியீட்டை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு மொத்த வாகனப் பயன்பாட்டில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. எனவே இதனை அதிகப்படுத்த ஃபேம் திட்டம் மட்டுமே போதாது. அந்தத் திட்டத்துக்கு உதவியாக பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டியதும் அவசியம். இது குறித்து சிஐஐ தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறியதாவது, “எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சிஐஐ அமைப்பின் இந்த ஆண்டின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது. சூழலியலை பாதிக்காத நீடித்த வளர்ச்சி பாதையில் செல்வதற்கான திட்டங்}கள், உட்கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்” என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close