[X] Close

திவால் மசோதா நடவடிக்கை மூலம் செயல்பட சாத்தியமுள்ள நிறுவனங்களை மூடுவது ஆபத்தானது: ஐபிபிஐ தலைவர் எம்.எஸ். சாஹூ கருத்து


  • kamadenu
  • Posted: 05 May, 2019 07:56 am
  • அ+ அ-

-பி.டி.ஐ,

திவால் மசோதா நடவடிக்கை மூலம் மீண்டும் செயல்படுவதற்கு வாய்ப்புள்ள நிறுவனங்களை மூடுவது மிகவும் ஆபத்தானது என்று திவால் மசோதா சட்ட வரையறை செயல்படுத்தும் அமைப்பின் தலைவர் எம்.எஸ். சாஹூ குறிப்பிட்டுள்ளார்.

வங்கிகள் தங்களிடம் கடன் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கடனை திரும்பப்பெற இயலாத நிலையில், நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கத் தொடங்குகின்றன.

வங்கிகளில் கடன் பெற்று அந்தத் தொகைக்குரிய வட்டி, அசல் ஆகியவை 90 நாட்களாக செலுத்தப்படாமலிருந்தால் அவை வாராக்கடனாகக் கருதப்படும். அத்தகைய நிறுவனங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திவால் மசோதா சட்டம் வகை செய்கிறது.

கடனை திரும்பச் செலுத்த முடியாத நிறுவனங்கள் எந்த காரணத்துக்காக முடங்கியுள்ளன. அதற்கான காரணத்தை அறிந்து ஒரு வேளை அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியுமா என ஆராய்வது, கூடுதல் நிதியை திரட்டும் சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய்வது உள்ளிட்ட பணிகளுக்கு மேலும் 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன் பிறகே திவால் மசோதா நடைமுறை சட்டத்தின் வழியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திவால் மசோதாவின்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் கடன் அளித்த வங்கிகள் அதற்குரிய தேவையான தகவலை அளிக்க வேண்டும். ஒருவேளை அந்நிறுவனத்தை மீண்டும் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது அபாயகரமானது என்று சாஹு குறிப்பிட்டார்.

வாராக்கடன் காரணமாக கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மூடும் நிலைக்கு அல்லது மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் தங்கள் தவறுகளை திருத்தி செயல்படுவதற்கு சட்டத்தில் வழிவகைகள் உள்ளன. திவால்நடைமுறையும் இதைத்தான் கூறுகிறது என்று சாஹூ சுட்டிக் காட்டினார்.

சாத்தியமுள்ள நிறுவனங்கள் மூடப்படக்கூடாது, அதேசமயம் இயங்குவதற்கு சாத்தியமே இல்லாத நிறுவனங்கள் மூடுவது சரியானது என்றும் அவர் குறிப்பிட்டார். போட்டி சூழல் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அது மிகவும் மோசமானது, எதிர் விளைவுகளை உள்ளடக்கியது என்றும் சுட்டிக் காட்டினார்.

திவால் நடைமுறையை செயல்படுத்தும் கடன் அளித்த வங்கிகள் அதற்கு முன்பாக அந்நிறுவனங்கள் குறித்த விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தை சீரமைக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியும், நிறுவனத்தின் மீது வங்கிகளுக்கு உள்ள அக்கறை காரணமாக கடன் வழங்கியிருப்பதும் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close