[X] Close

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 4 பிரபல ஆடிட்டிங் நிறுவனங்களுக்குத் தடை: டெல்லி பார் கவுன்சில் நடவடிக்கை


4

  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:47 am
  • அ+ அ-

கேபிஎம்ஜி, பிரைஸ் வாட்டர் கூப் பர், எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் டிலாய்ட் உள்ளிட்ட உலகின் மிகப் பிரபலமான நான்கு ஆடிட்டிங் நிறு வனங்களுக்கு சட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ள டெல்லி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.

உலக அளவில் முன்னணி நிறு வனங்கள் பலவற்றுக்கு பிரைஸ் வாட்டர் கூப்பர், எர்னஸ்ட் அண்ட் யங், டிலாய்ட் மற்றும் கேபிஎம்ஜி ஆகிய நான்கு ஆடிட்டிங் நிறு வனங்கள் வரவு செலவு கணக்கு களை நிர்வகித்து வருகின்றன. கணக்கு நிர்வகிப்பு மட்டுமல்லாமல் சட்ட ரீதியிலான சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு டெல்லி பார் கவுன்சில் தற்போது தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த உத்தரவு வரும் வரையில் எந்தவித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆடிட்டிங் நிறு வனங்கள் தங்கள் வசம் உள்ள வழக்கறிஞர்களின் முழு பட்டி யலையும், எண்ணிக்கை, அவர் கள் இயங்கும் இருப்பிடம் என அனைத்து விவரங்களையும் முழுமையான அறிக்கையாக சமர்ப் பிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

இந்திய சட்ட ஆலோசனை நிறு வனங்கள் கூட்டமைப்பின் தலைவர் லலித் பாசின் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி பார் கவுன்சில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நிறுவனங்கள் வழக்கறிஞர்கள் சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வதாக லலித் பாசின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்யாமலேயே சட்ட நடவடிக்கை களைப் பெரும்பாலான ஆடிட்டிங் நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இது சட்டத்துக்குப் புறம்பானது என் றார்.

இதற்கு பதிலளித்துள்ள சிஏ கல்விக்கூட தலைவர் நவீன் என்.டி. குப்தா, “ஆடிட்டிங் நிறுவனங் களைத் தடை செய்வதாக அறி விக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் எப்படி வந்தது? இது அத்துமீறல் நடவடிக்கை” என்று சாடியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close